
நான் ரஜினி ரசிகன் : எந்திரன் படத்தை காண காத்திருக்கிறேன் - அமீர்கான்!
சன் நெட்வொர்க் தலைவரும் சன் பிக்சர்ஸ் அதிபருமான கலாநிதி மாறன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஷங்கர் இயக்கியுள்ள இந்திய சினிமாவின் மிகப் பிரமாண்ட படைப்பான எந்திரன், படத்தை காண தான் ஆர்வமாக உள்ளதாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் அவர் பேட்டி ஒன்று அளித்துள்ளார். படத்தை பற்றி அமீர்கான் கூறுகையில் தான் சிறு வயதிலிருந்தே ரஜினி சார் படங்களை பார்த்து வளர்ந்தவன். அவருடைய தீவிர ரசிகன் நான். அவருடைய ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும், தற்போது ரோபாவாக நடித்துள்ளார். அவரது ரோபோ ஸ்டைலை காண நான் காத்திருக்கிறேன். உலக முழுவதும் எந்திரன் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என கூறினார்.
No comments:
Post a Comment